புகையிரதத்தின் மூலம் ஆண்டு ஒன்றிற்கு கிட்டத்தட்ட 105 மில்லியன் பயணிகளும் 1.6 மெக்ரிக் டொன் பொருட்களும் கொண்டு செல்லப்படகின்றன. அதன் பிரகாரம் அது ஆண்டு ஒன்றிற்க 4.4 மில்லியன் பயணிகள் கி.மீ. தூரமும்‚ 138 மில்லியன் பொருட்கள் கி.மீ. தூரமும் இயங்குகின்றது. புகையிரத சேவையானது பிரயாணத்திற்கும்‚ பொருட்களை கொண்டு செல்வதற்கும் இலாபகரமான ஒன்றாக இனம் காணப்பட்டுள்ளபோதிலும் கூட நாட்டின் அபிவிருத்திக்கு அதன் மூலம் கிடைக்கப் பெறும் பங்களிப்பானது அளப்பரியது. 2010 ஆம் ஆண்டாகும்போது புகையிரதத்தின் மூலம் கொண்டு செல்லும் பயணிகளின் அளவிளை 5மூ இருந்து 10மூ வரை அதிகரிப்பதற்கும்‚ பொருட்களை கொண்டு செல்வதனை 2மூ இருந்து 10மூ வரையில் அதிகரிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. பின்வரும் இலக்குகள்‚ தந்திரோபாய வழிமுறைகளினூடாக இந்த நோக்கினை அடைவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. |