அப்போது இலங்கை அரசாங்கத்தின் புகையிரதம் என்றழைக்கப்பட்ட புகையிரத சேவைக்கு நாட்டின் அபிவிருத்தியுடன் இணைந்ததொரு சாதனமாக 1850 காலப்பகுதியில் தோற்றம் பெற்றது. இலங்கை புகையிரத பாதைக்கான முதலாவது மண் கட்டியானது‚ சேர் ஹென்ரி வோர்ட் ஆளுநரால் வெட்டப்பட்டது. அச்சம்பவம் 1858 ஆகஸ்ட் மாதம் இடம்பெற்றது. பிரதான பாதை கொழும்பிலிருந்து அம்பேபுஸ்ஸ வரையில் கிழக்கிற்கு 54 கி.மீ. நிர்மாணிக்கப்பட்டதன் பின்னர் முதலாவது புகையிரதம் 1864 திசெம்பர் மாதம் 27 ஆம் திகதி பயணத்தை ஆரம்பித்தது. இந்த பாதையானது முதல் முதலில் 1865 ஒக்தோபர் மாதம் 02 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக போக்குவரத்திற்காக திறந்து வைக்கப்பட்டது. தமது வலையமைப்பு முறைமையை விருத்தி செய்துகொண்ட புகையிரத சேவையானது 1927 ஆம் ஆண்டிலே 1530 கி.மீ. இனைக் கொண்ட முழு பயண வழியொன்றினை செயற்படுத்தியது. பிரதான வீதி 1867 ஆம் ஆண்டு கண்டி வரையும்‚ 1874 இல் நாவலப்பிட்டி வரையும்‚ 1885 ஆம் ஆண்டு நானு ஓய வரையும்‚ 1894 ஆம் ஆண்டு பண்டார வரையும்‚ 1924 ஆம் ஆண்டு பதுளை வரையும் கட்டம் கட்டமாக விஸ்தரிக்கப்பட்டது. ஏனைய புகையிரத பாதைகள் நாட்டின் ஏனைய பிரதேசங்களை இணைத்து பின்னர் பூரணப்படுத்தப்பட்டது. அதன்ப டி மாத்தளை பாதை 1880 ஆம் ஆண்டும்‚ கரையோரப் பாதை 1895 ஆம் ஆண்டும்‚ வடக்குப் பாதை 1905 ஆம் ஆண்டும்‚ மன்னார் பாதை 1914 ஆம் ஆண்டும்‚ களணி பாதை 1919 ஆம் ஆண்டும்‚ புத்தளம் பாதை 1926 ஆம் ஆண்டும்‚ மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை பாதை 1928 ஆம் ஆண்டும் பூர்த்தி செய்யப்பட்டன.
ஆரம்பத்தில் புகையிரதமானது மலை நாட்டிலிருந்து தேயிலை மற்றும் கோப்பி போன்றவற்றை கொழும்பிற்கு கொண்டு செல்வதற்கு பயன்படுத்தப்பட்டது. ஏற்றுமதிக்காக கொண்டுவரப்பட்ட இந்த உற்பத்திகள் நாட்டின் பிரதான வருமான வழியாகக் காணப்பட்டது. சனத் தொகை பெருக்கத்துடன் பயணிகள் போக்கு வரத்து அதிகரித்ததுடன்‚ 1960 தசாப்த காலப்பகுதியில் பிரதானமாக தொழில் முயற்சியின் அடிப்படையாக பொருட்களை கொண்டு செல்லும் நடவடிக்கை தோற்றம் பெற்றது. புகையிரதமானது தற்போது பிரதானமாக பயணிகள் போக்குவரத்தையே மேற்கொண்டு வருகிறது. முக்கியமான பயணிகள் போக்குவரத்து சேவையொன்றினை மேற்கொண்டுவரும் புகையிரதமானது நெடுஞ்சாலைகளின் நெரிசல்களையும் குறைத்து பயணிகளை கொழும்கும்‚ கொழும்பிலிருந்தும் கொண்டு செல்கின்றது. |